

தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்காக விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. நிறுவனங்கள் வங்கி தொடங்க தகுதி வாய்ந்தவையாக இருக்கும் பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் (ஆன் டேப்) வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கலாம். இதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது.
கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில் குறிப்பாக பெரிய நிறுவனங்கள் வங்கி தொடங்க முடியாது என்றும் ஆனால் வங்கிகளில் 10 சதவீத பங்குகள் வைத்திருக்க முடியும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதேபோல பத்து வருடங் களுக்கு மேலாக வங்கி மற்றும் நிதி சார்ந்த அனுபவம் இருக் கும் தனிநபர்களும் வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பிக் கலாம். குறைந்தபட்ச பங்கு முதலீடு ரூ.500 கோடி ஆகும். இதில் நிறுவனர் குழுமம் குறைந்த பட்சம் 40 சதவீத ஒட்டுரிமையை வைத்திருக்க வேண்டும். வங்கி தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஐந்து வருடங்களுக்கு இந்த அளவைக் குறைக்க முடியாது.
வங்கி செயல்பட தொடங்கி 15 வருடங்களில் 15 சதவீதமாக குறைத்துக்கொள்ள முடியும்.
இதற்கு முன்பாக 1993, 2001 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வங்கி தொடங்க விண்ணப் பிப்பதற்கு குறிப்பிட்ட கால இடைவெளி வழங்கப்பட்டது. இனி தகுதி வாய்ந்த நிறுவனங் கள், தனிநபர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப் பிக்கலாம். 2001-ம் ஆண்டு யெஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்த்ரா வங்கி என இரு வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு விண்ணப்பத்த பல நிறுவனங்களில் ஐடிஎப்சி மற்றும் பந்தன் ஆகிய நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.
நிதிக்கொள்கை குழு
வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நிதிக்கொள்கை குழுவை (எம்பிசி) விரைவில் அமைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி முடிவடைகிறது. அதற்குள் புதிய குழு உருவாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதுபோன்ற ஒரு குழு அமைப்பது குறித்த முடிவை கடந்த வருடம் எடுத்தது. இந்த வருடம் இந்த குழு அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தோனேஷியாவில் நடந்த மத்திய வங்கியாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர்கள் கூட்டத்தில் ராஜன் மேலும் கூறியதாவது.
பல நாடுகளில் இதுபோன்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா சற்று பின்தங்கியுள்ளது. இந்த குழு உருவாக்குவது மிகவும் அவசியம். நான் வெளியேறு வதற்குள் இந்தக் குழு அமைப்பதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம். பணவீக்கம் குறித்த எதிர் பார்ப்பை இந்த குழு வருங் காலத்தில் நிறைவேற்றும் என நினைக்கிறேன் என ரகுராம் ராஜன் கூறினார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 1.50 சதவீதம் வட்டி குறைப்பினை ரிசர்வ் வங்கி செய்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.