

உலக அளவில் எரிபொருள் பயன்படுத்துவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. எரிபொருள் நுகர்வில் இதற்கு முன்பு மூன்றாவது இடத்தில் ஜப்பான் இருந்தது. தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறு வனத்தின் சர்வதேச எரிபொருள் புள்ளிவிவர ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை 2015 புள்ளிவிவரப்படி 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் எரிபொருள் தேவை தினசரி 41 லட்சம் பேரல் களாக உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து எரி பொருள் தேவையில் இந்தியா மூன்றாவது நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா வின் தினசரி எரிபொருள் தேவை 1.90 கோடி பேரல்களாக உள்ளது. சீனாவின் தினசரி எரிபொருள் தேவை 1.10 கோடியாக உள்ளது.
2015 நிலவரப்படி சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் நுகர்வில் இந்தியாவின் பங்கு 4.5 சதவீதமாக உள்ளது. இந்தியா வினுடைய கச்சா எண்ணெய் தேவை சீனாவின் தேவையை விட அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவை விகிதம் 19.7 சதவீதத்திலிருந்து மேலும் 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015 நிலவரப்படி உலக அளவில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 9.5 கோடி பேரலாக உள்ளது.
கச்சா எண்ணெயின் தேவையில் ஜப்பான் நான்காவது இடத்தில் உள்ளது. 2015 புள்ளிவிவரங்கள் படை இங்கு தினசரி தேவை 41 லட்சம் பேரல்களாக உள்ளது. 2014 ல் 43 லட்சமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் தேவை 38 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச அளவில் அடிப்படை எரிபொருளுக்கான தேவை 1 சதவீதம் மட்டுமே வளர்ந் துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடந்து குறைந்து வருகிறது, மேலும் சீனாவின் எரிபொருள் தேவையின் வளர்ச்சி குறைவான உள்ளதும், இந்த நாடுகள் தொழில்துறை பொருளாதாரத்தை விட்டு விலகி சேவைத் துறை பொருளாதாரத்துக்கு மாறிவருவதாகவும் அறிக்கை கூறியுள்ளது.