பிரிட்டன் வெளியேற்றத்தால் பாதிப்பில்லை: அர்விந்த் சுப்ரமணியன் கருத்து

பிரிட்டன் வெளியேற்றத்தால் பாதிப்பில்லை: அர்விந்த் சுப்ரமணியன் கருத்து
Updated on
1 min read

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதால் இந்தி யாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் பலமாக உள்ளது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் உள்ள ஆசிய மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:

பிரிட்டன் வெளியேறியதால் ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பிரச்சினையை எளிதாக சமாளிக்கும் அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரம் பலமாக உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நடக்கும் முக்கியமான நிகழ்வு இதுவாகும்.

பருப்பு விலை உயர்வுக்கு குறைவான உற்பத்தியே காரணம். ஆனால் காய்கறிகள் விலை உயர்வுக்கு உற்பத்தியை விட சந்தை காரணங்களே அதிகம். தவிர மக்களின் உணவுப்பழக்கத்தில் பருப்பு என்பது முக்கியமானதாகும். ஆனால் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி இல்லை. அதனால் பருப்பு உற்பத் தியை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் வாக்களிக்க தகுதி உடையவர்களில், வரி செலுத்துபவர்கள் 4 சதவீதம் மட்டுமே. ஆனால் நாட்டின் பொரு ளாதார மற்றும் அரசியல் சூழ் நிலைகளை பார்க்கும்போது 23 சதவீதமாக இருக்க வேண் டும். அதனால் வரி விலக்கு எல்லைகளை உயர்த்தப்போவ தில்லை.

இவ்வாறு அரவிந்த் சுப்ர மணியன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in