

நாட்டின் ஒட்டுமொத்த விலை பண வீக்கம் கடந்த 5 மாதங்களில் இல் லாத அளவாக மே மாதத்தில் 2.17 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது 3.85 சதவீத மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக ஒட்டுமொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை குறைவு காரணமாக ஒட்டுமொத்த விலை பண வீக்கம் குறைந்துள்ளது.
இதற்கு முன்பு ஒட்டுமொத்த விலை குறியீட்டு பணவீக்கம் கணக்கிடுவதற்கு 2004-05-ம் ஆண்டு கணக்கீடு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது 2011-12-ம் ஆண்டு கணக்கீடு எடுக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த விலை பட்டியலில் மொத்தம் 697 பொருள்கள் இடம்பெற்றுள்ளன. முன்னர் இப்பட்டியலில் 676 பொருள்கள் இடம்பெற்றுள்ளன.