

கடந்த நிதி ஆண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் கார் விற்பனை 9.96 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 2,82,519 வாகனங்கள் விற்பனையானதாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (சியாம்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 2,56,920 கார்கள் விற்பனையானது. உள்நாட்டில் கார் விற்பனை 8.17 சதவீதம் உயர்ந்து 1,90,065 ஆக உள்ளது. முந்தைய ஆண்டில் விற்பனை 1,75,709 ஆக இருந்தது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 9,15,199 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டில் இது 9,46,754 ஆக இருந்தது. மோட்டார் சைக்கிள் விற்பனை மட்டும் 3.33 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
மார்ச் மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை மொத்தம் 14,71,576 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டில் இது 14,67,710 ஆக இருந்தது. வர்த்தக வாகன விற்பனை 9.26 சதவீதம் உயர்ந்து 87,257 ஆக இருந்தது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் உள்நாட்டில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 30,46,727 ஆகும். முந்தைய ஆண்டில் இது 27,89,208 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 21,02,996 ஆக இருந்தது.