

2016-ல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட் போன் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் போன்கள் பெற்றுள்ளன.
இதுகுறித்து ஐஹெச்எஸ் மார்கிட் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில், ''ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6எஸ் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தேவையான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய வசதிகளோடு, ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு பழைய சாதனங்களை விற்பதிலும் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் மற்றும் எஸ்7 ஆகிய ஸ்மார்ட்போன்கள் முறையே ஐந்து மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பிடித்துள்ளன
2016-ல் அதிகம் விற்பனையான முதல் 10 ஸ்மார்ட் போன்களில் சாம்சங் நிறுவனம் 5 இடங்களைப் பிடித்துள்ளது.
சீனத் தயாரிப்பாளரான ஓப்போ (OPPO), அதிகம் விற்பனையான ஸ்மார்ட் போன்களின் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக கடந்த மார்ச் மாதம் ஓப்போ தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.