

கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.
அமெரிக்க வர்த்தகத் துறையின் சர்வதேச வர்த்தக பிரிவின் உதவிச் செயலாளர், ஒபாமா அமைச்சரவையில் வெளிநாட்டு வர்த்தகச் சேவையின் பொது இயக்குநராகவும் பதவி வகித்தவர்.
கேபிஎம்ஜி நிறுவனத்துக்காக அமெரிக்காவில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர். நிறுவனத்தின் சர்வதேச நிர்வாக ஆலோசனை தலைவர்கள் குழுவிலும் இருந்தவர்.
பிளானிங் அண்ட் லாஜிக் சாப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தவர். நெட்லேப்ஸ் சாப்ட்வேர், எலைட் மைக்ரோட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் துணைத் தலைவர் மற்றும் தலைமை சிஎப்ஓ பொறுப்புகளையும் வகித்தவர்.
அமெரிக்க- இந்திய தொழில் குழுவின் இயக்குநர் குழு உறுப்பினர், டை அமைப்பின் நிரந்தர உறுப்பினர், ஸ்டான்போர்டு பல்கலை., கலிபோர்னியா பல்கலை., கேரளாவில் உள்ள ஆசியன் வணிகக் கல்வி மையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள குழுக்களிலும் பொறுப்பில் உள்ளார்.
கேரள பல்கலை.யில் பிஎஸ்சி பட்டமும், மாசசூசெட்ஸ் கல்வி நிறுவனத்தில் மேலாண்மையியலில் உயர்கல்வியும் முடித்தவர்.