Last Updated : 17 Jan, 2017 03:12 PM

 

Published : 17 Jan 2017 03:12 PM
Last Updated : 17 Jan 2017 03:12 PM

பணமதிப்பு நீக்கம் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது: ஐ.எம்.எஃப்.

பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1% குறைந்துள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டிலும் நீடித்து 0.4% பொருளாதார வளர்ச்சி குன்றும் என்று பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார அறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது, இதன்படி நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6% வளர்ச்சியிலிருக்கும், அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.2% என்று இருக்கும். முன்னதாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6% என்று ஐ.எம்.எஃப். குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்கா மற்றும் சீனாவில் பொருளாதாரம் 2018-ல் சற்றே முன்னேற வாய்ப்பிருந்தாலும் இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கான வளர்ச்சி விகிதம் சற்றே சரிவுப்பாதையில் செல்லும் என்று ஐ.எம்.எப் கூறுகிறது.

“இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1% குறையும். அடுத்த ஆண்டு 0.4% குறையும், காரணம் பணத்தட்டுப்பாடு, சம்பள விநியோகத்தில் இடையூறு ஆகியவை. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2016-ம் ஆண்டுக்கு 3.1% என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்பது அமெரிக்க பொருளாதாரத்தில் உடன்பாடான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது, ஆனாலும் தாக்கத்தின் அளவை உடனடியாக கணித்து விடவும் முடியாது. கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளைமாளிகையும், நாடாளுமன்றமும் ஒரே கட்சியின் கையில் உள்ளதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் சூழல் உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2017-க்கான சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018-ல் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6% ஆகவும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.7% ஆகவும் இருக்கும்.

2017-ம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி விகிதம் உலகப்பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தீர்மானிக்கும்” என்று ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x