இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் ஐடி வேலைகளுக்கு பாதிப்பு

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் ஐடி வேலைகளுக்கு பாதிப்பு
Updated on
1 min read

தகவல் தொழில்நுட்ப துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு உருவாகும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சுமார் 150 கோடி டாலர் மதிப்புகளைக் கொண்ட இந்தியாவின் ஐடி துறை வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வொயிட் காலர் ஜாப் என்கிற வகையில் 35 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்திய ஐடி துறை வைத்துள்ளது. தற்போது ஐடி துறையில் உருவாகியுள்ள ஒட்டுமொத்த மாற்றத்தின் காரணமாக இந்தியா வின் ஐடி துறையில் போட்டிகள் உருவாகும் என்றும், இதனால் தானாகவே வேலை வாய்ப்புகள் குறையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹெச்எப்எஸ் இது தொடர்பான ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐடி துறை சார்ந்து குறைந்தபட்ச திறன் கொண்ட 6.4 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு என்றும், கிட்டத்தட்ட ஐந்துக்கு ஒன்று என்கிற விகிதத்தில் ஐடி துறை மற்றும் பிபிஓ வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் கூறியுள்ளது.

தன்னியல்பான வளர்ச்சியால் தற்போது ஐடி துறை உச்சத்தில் உள்ளது. தொழில்நுட்ப திறமை வாய்ந்த பணியாளர்களே நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி யில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய ஐடி துறை வளர்ச்சி சிறப்பாக இருந்தது. தற்போது முதல் முறையாக வேலைவாய்ப்பு கள் சரியும் சூழல் உருவாகி யுள்ளது. இந்திய முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே அதிகபட்ச லாபத்தை தக்க வைத்துக்கொண் டுள்ளன. ஆனால் இந்த வளர்ச்சி திறமை வாய்ந்த பணியாளர்களை கொண்ட ஒரு பக்க வளர்ச்சியாக உள்ளன என்று இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், முதன்மை ஆய்வாள ருமான பில் ஃபெர்ஷ்ட் குறிப்பிட் டுள்ளார். இருந்தாலும் குறைந்த திறன் பணி வாய்ப்புகள் சரியும் அதே நேரத்தில் தன்னியல்பாகவே அதிக மதிப்பு கொண்ட வேலைகளுக்கான வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஹெச்எப்எஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.

எனினும் ஐடி மற்றும் பிபிஓ சார்ந்து அதிக திறன் கொண்ட மற்றும் நடுத்தர திறமை கொண்ட 1.6 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும் என்றும் இந்த ஆய்வு கணித்துள்ளது. ஐடி மற்றும் பிபிஓ துறை சார்ந்த சேவைகளில் புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டியது இந்தியாவின் தேவையாக உள்ளது என்றும் ஆய்வு கூறியுள்ளது. பொறியியல் சேவைக்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் உள்ளது என்று ஃபெர்ஷ்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துறையில் திறன் குறைந்த பணிகளின் வேலைவாய்ப்பு சரிவு அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் 7.7 லட்சமாகவும், இங்கிலாந்தில் 2 லட்சமாகவும் இருக்கும் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in