கிங்பிஷர் ஹவுஸ் ஏலம் 5-வது முறையாக தோல்வி

கிங்பிஷர் ஹவுஸ் ஏலம் 5-வது முறையாக தோல்வி
Updated on
1 min read

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஹவுஸ் ஏலம் 5 வது முறையாக தோல்வியில் முடிந்துள்ளது. விஜய் மல்லையாவின் கடனுக்கு ஈடாக வங்கிகள் கையகப்படுத்திய கிங்பிஷர் இல்லத்தை எஸ்பிஐ தொடர்ந்து 5 வது முறையாக நேற்று ஏலத்துக்கு கொண்டு வந்தது. ஏற்கெனவே மார்ச் மாத ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த முன்வைப்பு தொகையான ரூ.103.50 கோடியிலிருந்து 10% முன்வைப்பு தொகையை குறைத்து ரூ.93.50 கோடி என நிர்ணயித்திருந்தது. அதற்கு முன்னர் டிசம்பர் மாதத்தில் ஏல கேட்பு தொகை ரூ.115 கோடியாக இருந்தது.

இந்த சொத்தை வாங்குவது தொடர்பாக பலரும் விசாரித்தனர். ஆனால் நேற்றைய ஏலத்தில் கலந்து கொள்வதற்காக ஒருவரும் முன்வைப்பு தொகை செலுத்த வில்லை என்று எஸ்பிஐ தெரிவித் துள்ளது.

இந்த சொத்தை ஏலத்தில் விற்பதற்காக கடந்த ஆண்டில் எஸ்பிஐ முயற்சி மேற்கொண்டது. 2017 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக ஏலம் விட்ட போது ஏல தொகை ரூ. 150 கோடி யாக இருந்தது. அதற்கு பின்னர் ஆகஸ்ட் மாத ஏலத்தில் ரூ.135 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந் தது. கடந்த ஆண்டில் முதல் முறை ஏலத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட ஏல தொகையை விட 38 சதவீதம் வரை விலை குறைக்கப்பட்ட பின்னரும் தற்போதைய ஏலத்தில் எவரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இல்லம் மும்பை விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. வர்த்தக ரீதியாக அதிக முக்கியத்துவம் கொண்ட இடம் என்று வங்கிகள் குறிப்பிட்டுள்ளன.

விஜய் மல்லையாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கோவா இல் லத்தை மூன்று ஏலத்துக்கு பிறகு வைக்கிங் மீடியா அண்ட் எண் டர்டெயின் மெண்ட் நிறுவனத்தின் சச்சின் ஜோஷி ரூ.73.01 கோடிக்கு ஏலத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in