Published : 19 Feb 2017 10:55 AM
Last Updated : 19 Feb 2017 10:55 AM

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவராக டிசிஏ ரங்கநாதன் நியமனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவராக டிசிஏ ரங்கநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் எக்ஸிம் வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவர். அதே போல பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக சுனில் மேத்தா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர பொதுத்துறை வங்கிகளில் பொது மேலாளர் நிலையில் இருக்கும் பலரை செயல் இயக்குநராக மத்திய அரசு பதவி உயர்த்தியுள்ளது. பேங்க் ஆப் பரோடாவின் பொது மேலாளர் என். தாமோதரன் அதே வங்கியின் செயல் இயக்குநராக உயர்த்தப்பட்டுள்ளார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் கே. சுவாமிநாதன், அதே வங்கியில் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூரின் முதன்மை பொதுமேலாளர் அசோக் குமார் பிரதான், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அலகாபாத் வங்கியின் பொதுமேலாளர் பி. ரமண மூர்த்தி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல பொதுத்துறை வங்கிகளின் சில பொது மேலாளர்கள், செயல் இயக்குநராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x