Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அரசு அலுவலர்களுக்கு தடை?

அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.

உள்ளார்ந்த தகவல்களை (insider trading) வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்பவர்களைத் தடுப்பதற்கான புதிய விதிமுறையை பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி கொண்டுவர இருக்கிறது. இதில் அரசு அலுவலர்கள் மற்றும் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இது குறித்து வரும் 31-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று செபி தெரிவித்திருக்கிறது. இதன் படி செபியின் அதிகாரிகள் கூட பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. செபியின் பணியாளர்கள் யாரும் தங்களின் பதவிக்காலம் முடியும் வரை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது.

மேலும் கார்ப்பரேட் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இந்த விதிமுறைகளை கேரளம் மற்றும் கர்நாடகம் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.கே.சோதி தலைமையிலான குழு உருவாக்கி இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் செபி இந்தக் குழுவை அமைத்தது. இந்த கமிட்டி கடந்த 20 வருட உள்ளார்ந்த முறைகேடு நடந்த தகவல்கள் அடிப்படையில் புதிய விதிமுறையை உருவாக்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x