

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வருகிறார்.
2008-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஏர்செல் செல்லுலார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
1986-ம் ஆண்டு பிடபிள்யுசி நிறுவனத்தில் தனது பணியை தொடங்கியவர். இந்நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதார பிரிவில் பட்டமும் அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் முடித்தவர்.