பிரெக்ஸிட் விவகாரத்தால் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கு இழப்பு

பிரெக்ஸிட் விவகாரத்தால் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கு இழப்பு
Updated on
1 min read

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகினால் பிரிட்டனின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவ னமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஆண்டு லாபத்தில் 1470 கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய யூனியனில் இங்கி லாந்து தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்துக் கணிப்பு நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நிறுவனங்களின் மூத்த பொருளாதார அறிஞ ரான டேவிட் ராவ், பிரிட்டன் வெளி| யேறினால் என்ன விளைவு கள் ஏற்படும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் முக்கிய நிறுவ னங்களுக்கு ஐரோப்பிய யூனிய னில் எதிர்காலம் நிலையில்லாத தாக இருப்பதாக தெரிய வந் துள்ளது. ஜாகுவார் நிறு வனம் ஒரு காலாண்டில் 5,20,000 கார்களை ஐரோப்பாவில் விற்று வருகிறது.

“இந்த பிரச்சினையை சாதார ணமாக எங்களது தொழிலின், திட்டமிடல் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே வைத்துள் ளோம் என்றும், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறினால் என்ன மாற்றம் நிகழும் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்’’ என்று ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in