

ஹெச்டிஎப்சி வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 18.2 சதவீதம் உயர்ந்து ரூ.3,990 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.3,374 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.662 கோடியில் இருந்து ரூ.1,261 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நான்காம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,560 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.18,862 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.14,549 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தை விட இது 18.3 சதவீதம் அதிகமாகும்.
இந்த காலாண்டில் வங்கியில் இருந்து 4,000 பணியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர் அதனால் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 84,325 ஆக குறைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டிலும் 5,000 பணியாளர்கள் வெளியேறினார்கள். வங்கியில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 95,002 பணியாளர்கள் இருந்தனர்.
கடந்த நிதி ஆண்டுக்கான டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 11 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 9.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட் டது. கடந்த நிதி ஆண்டில் 195 கிளை கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் 300 முதல் 400 கிளை கள் வரை தொடங்கப்பட்டுள்ளன. வரும் காலங்களிலும் இதே அள விலே புதிய கிளைகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருக் கிறது.
தற்போது 4,715 கிளைகளும், 12,260 ஏடிஎம்களும் செயல்பட்டு வருகின்றன. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.05 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.