

உலகின் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போனான `பிரீடம் 251’ இரண்டு லட்சம் போன்கள் தயாராக உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிங்கிங் பெல்ஸ், பல்வேறு தடைகளைக் கடந்து ரூ.251 விலையில் ஸ்மார்ட்போனை தயாரித் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்துக்கு எதிராக பல வகைகளிலும் வழக்குகள் தொடுக்க பட்ட நிலையில் ரூ.251 க்கு ஸ்மார்ட்போன் சாத்தியம் என்பதை இந்த நிறுவனம் நிரூபித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படி ஜூன் 30 ஆம் தேதி முதல் செல்போன்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறோம் என்று இந்த நிறுவனத்தின் தலைவர் மொகித் கோயல் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியபோது;
ஜூன் 30 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பத் தொடங்குகிறோம். முதற்கட்டமாக இரண்டு லட்சம் ஸ்மார்ட்போன்களை அனுப்பிய பிறகு, மீண்டும் முன்பதிவினை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
எங்களது தவறு என்ன என்பதை தெரிந்து கொண்டோம். அமைதியாக இருக்க முடிவெடுத் தோம். இப்போது எங்களது தயாரிப் போடு வெளியே வருகிறோம் என்று கோயல் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் ஒரு போனுக்கு ரூ.140 முதல் ரூ.150 வரை நஷ்டம் வருகிறது என்றும், அதிக அளவில் உற்பத்தி செய்கிறபோது லாபத்துக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கோயல் குறிப்பிட்டார். இந்த தயாரிப்பு மூலம் நஷ்டம் அடைந்தாலும் கிராப்புற ஏழை இந்தியர் களை டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற முயற்சிகளோடு இணைக்க வேண்டும் என்கிற கனவை அடைந்துள்ளோம். பிரீடம் 251 ஸ்மார்ட்போன் அதை நிறை வேற்றும் என்று குறிப்பிட்டார்.
டூயல் சிம், 4 இன்ச் தொடுதிரை யுடன், 3ஜி நெட்வொர்க்கில் இயங்கும் விதமாக 1.3 ஜிகா ஹெட்ர்ஸ் குவாட்கோர் பிராசசர், 1ஜிபி ராம், 8 ஜிபி உள் நினைவக வசதி, 32 ஜிபி வெளி நினைவக வசதி உள்ளது. பின்பக்கம் 8 எம்பி கேமரா, முன்பக்கம் 3.2எம்பி கேமரா, 1800 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும். கருப்பு வெள்ளை இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். செல்போனை ஆன் செய்கிறபோது இந்திய தேசிய கொடியின் மூவர்ண டிஸ்பிளே வரும். கூகுளின் அனைத்து அடிப்படை ஆப்ஸ்களும் இதில் இருக்கும்.
முழுக்க முழுக்க `மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு உட்பட்டு எங்களது ஹரித்வார் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு 2 லட்சம் செல்போன்களை தயாரிக்க திட்டம் வைத்துள்ளதாகவும் கோயல் குறிப்பிட்டார். நிறுவனம் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலை யில் 32 அங்குல எல்இடி டிவியை `பிரீடம்’ என்கிற பெயரில் ஜூலை முதல் வாரம் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் தேதிக்குள் 25 லட்சம் ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பிப்ரவரி மாத மத்தியில் இந்த நிறுவனம் கூறியிருந்தது. இதற்கான முன்பதிவு தொடங்கிய மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 7 கோடி பேர் முன்பதிவு செய்தனர்.
10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 32 அங்குல எல்இடி டிவியை `பிரீடம்’ என்கிற பெயரில் ஜூலை முதல் வாரம் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.