

கடல் உணவு ஏற்றுமதிப் பொருள் களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப் படும் என்று மத்திய வர்த்தக அமைச் சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
எம்இஐஎஸ் எனப்படும் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று அவர் கூறி னார். இது தவிர கடல் வாழ் உயிரி னங்கள் மற்றும் மீன் வளத்துக்கு தனி முகமை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
எம்இஐஎஸ் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.22 ஆயிரம் கோடியை ஒதுக் கியுள்ளது. இந்தத் தொகையானது ஏற்றுமதியை ஊக்குவிக்க அளிக்கப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டிலிருந்து கூடு தலாக ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. இந்தத் தொகையானது சில கடல் உணவு பொருள் ஏற்று மதியை ஊக்குவிக்க அளிக்கப் படுகிறது என்று ஹைதராபாதில் நடைபெற்ற சர்வதேச கடல் உணவு கண்காட்சியில் பங்கேற்றபோது குறிப்பிட்டார்.
மாநில முதல்வர்களின் வழிகாட் டுதலின்படி அந்தந்த மாநிலங் களின் தலைமைச் செயலர்கள் தலை மையில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன் வளத்துக்கென தனி முகமை அமைக்கப்படும். இவை கடல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணை யத்தின் (எம்பிஇடிஏ) கட்டுப்பாட் டின் கீழ் செயல்படும். இந்த ஆணையமானது கடல் பொருள் ஏற்றுமதி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் மிக நீண்ட கடல் பகுதி உள்ளது. கடல் உணவு வளங்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் இந்தத் துறையில் இந்தியா முன்னேற வேண்டிய தொலைவு மிக அதிகமாக உள்ளது. கடல் உணவுகளைப் பொறுத்தமட்டில் இந்தியா அதன் முழுத் திறனை எட்டவில்லை. இதற்கு முக்கியக் காரணம் கடல் உணவுப் பொருள்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யாததுதான் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சமீபத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் சுற்றுப் பயணம் செய்தபோது அந்நாடுகளின் வர்த் தக அமைச்சர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் அவர்கள் கடல் சார் உணவு பொருள் உற்பத் தியில் இந்தியாவுக்கு உதவ தயா ராக இருப்பதாக தெரிவித்ததை யும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
கடல் சார் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் எம்பிஇடிஏ மிகச் சிறப்பாக பணியாற்றும் என குறிப்பிட்ட அவர் இத்துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடுக்கிவிடவும் தேவையான பணிகளை அது மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலிருந்து கடந்த ஆண்டு (2015-16) ஏற்றுமதி யான இறால் மீன்களில் ஆந்திர மாநில பங்களிப்பு மட்டும் 45 சத வீதம் ஏன்று குறிப்பிட்டார்.