

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருக்கும் என்று நொமுரா கணித்திருக்கிறது. முன்னதாக 7.8 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நொமுரா கணித்திருந்தது. ஏற்றுமதியில் பெரிய முன்னேற்றம் இல்லாதது, தனியார் முதலீடுகளில் ஏற்றம் இல்லாதது ஆகிய காரணங்களால் வளர்ச்சி விகித கணிப்பை நொமுரா குறைத்திருக்கிறது
கடந்த மார்ச் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாக இருந்தது. இதனால் கடந்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வளர்ச்சி விகித மாகும்.
ஜிடிபி தகவல்களில் ஏற்றம் இருக்கிறது. ஆனால் பெரிய அளவினான ஏற்றம் இல்லை. தனியார் நுகர்வு காரணமாகவே வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றும் நொமுரா கூறியுள்ளது.
ஏழாவது ஊதிய குழு, சராசரி பருவ மழை மற்றும் பொதுத்துறைகளில் முதலீடு ஆகியவை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். அதே சமயத்தில் ஏற்றுமதி மற்றும் தனியார் முதலீட்டில் எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை என்பதால் ஜிடிபி வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும்.
பணவீக்கம் ஐந்து சதவீதத்துக்கு மேல் இருப்பதால் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு கூட்டத்தில் (ஜூன் 7) வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று நொமுரா கணித்திருக்கிறது.