

ஒரே பிராண்ட் சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கான அனுமதியில் 30 சதவீதம் உள்ளூர் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்கிற விதிமுறையில் மாற்றமில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். இந்தியா வர்த்தகர்களுக்கான நாடாக மட்டுமே இருக்க முடி யாது என்று குறிப்பிட்டவர், ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை யகங்கள் இந்தியாவில் தொடங் கும் விண்ணப்பத்துக்கான அனுமதியில் இதுவே இறுதியான முடிவல்ல என்றும் குறிப்பிட்டடார்.
மத்திய அரசின் அனுமதிக்காக நீண்ட காலமாக காத்திருக்கும், சர்வதேச அளவிலான முதலீட்டு திட்டங்களுக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமே அனுமதி மறுத்துள்ளதையும் ஜேட்லி சுட்டிக் காட்டினார். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையகங்களை திறக்க அனுமதி கோரியுள்ளது. ஆனால் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற விதியை குற்றம் சாட்டியுள்ளது.
தங்களது தயாரிப்புகள் மேம் பட்ட தொழில்நுட்பத்தில் தயாராவ தால் ஆப்பிள் நிறுவனம் இந்தியா வில் விற்பனையகங்களை அமைக்க இந்த விதிமுறைகளி லிருந்து விலக்கு கேட்கிறது என்று ஜேட்லி கூறினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிக் குக் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது தங்க ளது ஊழியர்களிடம் பேசுகை யில், இந்தியாவில் விற்பனை யகங்களை அமைப்பது தொடர் பான விஷயத்தில் நிறுவனத்தின் உத்திகள் இந்தியாவின் விதிமுறை களுக்கு மாறாக உள்ளது என்று குறிப்பிட்டார். இதற்கு காரணம் இந்தியாவில் வெளிநாட்டு ஒற்றை பிராண்ட் நிறுவனங்கள் தொழில் தொடங்குகிறபோது 30 சதவீதம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது என்பதுதான் என்று கூறினார்.
இந்த நிலைமை ஒரு நியாயமான காரணம். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா என்கிற மிகப்பெரிய சந்தை அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சந்தையை வர்த்தகத்துக்கு மட்டுமே அனுமதிக்க முடியாது. வேலைவாய்ப்புகளையும் உரு வாக்க வேண்டும் என எதிர்பார்க் கிறோம். இது இல்லையென்றால் எதிர்காலத்தில் இந்தியா வர்த்தகர் களின் நாடாக மாறிவிடும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.