Last Updated : 23 Mar, 2017 10:21 AM

 

Published : 23 Mar 2017 10:21 AM
Last Updated : 23 Mar 2017 10:21 AM

பிஎம்டபிள்யூ பைக் ஏற்றுமதி செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டார் சைக் கிளைத் தயாரித்து ஏற்றுமதி செய்ய உள்ளது. இதற்காக ரூ.350 கோடியில் ஆலையை விரிவாக்கம் செய்கிறது. அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனம், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறு வனத்துடன் இணைந்து 310 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை தயாரித்து ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக டிவிஎஸ் நிறுவனம் அடுத்த நிதி ஆண்டில் ரூ.350 கோடியை ஆலை விரிவாக்கத்துக்காக முதலீடு செய்கிறது. 2017-18ம் ஆண்டுக்குள் ஒரு புதிய மாடல் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக் கிள் அறிமுகப்படுத்தவும் திட்டமிட் டுள்ளது என்று டிவிஎஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிவிஎஸ் நிறுவனமும், பிஎம்டபிள்யூ நிறுவனமும் கூட்டாக இணைந்து 250சிசி முதல் 500 சிசி வரையிலான பைக்குகளை தயாரித்து தங்களது விநியோக நெட்வொர்க் மூலம் விற்பனை செய்ய 2013ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தன. தற்போது 310 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் இன்ஜினை இரு நிறுவனங்களும் கூட்டாக உருவாக்கியுள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய டிவிஎஸ் நிறுவனத் தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கே.என்.ராதா கிருஷ்ணன், அடுத்த நிதி ஆண்டில் 310 சிசி திறன் கொண்ட அகுலா மோட்டார் சைக்கிள் அறிமுகப் படுத்தப்படும். இதை விநியோகிப் பதற்கான முறையை இன்னும் முடிவு செய்யவில்லை. ஏற்கெனவே உள்ள டீலர்கள் மூலம் விற்பனை செய்வதா அல்லது புதிய டீலர்கள் மூலம் விற்பனை செய்வதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.ஆனால் எத்தனை மோட்டார் சைக் கிள்கள் தயாரிக்கப்படும், ஏற்றுமதி எத்தனை செய்யப்படும் என்கிற விவரத்தை குறிப்பிடவில்லை. விரி வாக்கத்துக்கான முதலீடு நிறுவனத் திலிருந்தே மேற்கொள்ளப்படும் என்றார்.

நடப்பு நிதியாண்டில் 14% சந்தை பங்களிப்பை டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் வைத்துள்ளது. ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரித்து வருகிறது என்றார். தற்போது ஸ்கூட்டர் விற் பனையில் 17% சந்தையையும், மோட்டார் சைக்கிள் விற்பனையில் 8% சந்தையையும் வைத்துள்ளது. நிறுவனத்தின் வருமானத்தில் உதிரி பாகங்கள் துறையில் 10% வருமா னம் வருகிறது என்றும் ராதாகிருஷ் ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x