Published : 08 Aug 2016 10:56 AM
Last Updated : 08 Aug 2016 10:56 AM

அமேசான் பிரைம் ஏர் தொடக்கம்

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான பார்சல் சேவையைத் தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்யும் பொருட்கள் விமானம் மூலம் மற்ற நகரங்களுக்கு செல்லும். முதல் முறையாக தன்னுடைய பெயரில் கார்கோ விமானத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அடுத்த சில வருடங்களில் இந்த சேவையை 40 கார்கோ விமானங்களாக விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனியாக கார்கோ விமானம் இருந்தாலும் பொருட்களை அனுப்புவதற்கு பெட்எக்ஸ், யூபிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களையும் பயன்படுத்துவோம் என அமேசான் அறிவித்திருக்கிறது.

எனினும், தனது விமானத்தில் அடுத்த நிறுவனங்களின் பொருட்களை ஏற்றிச்செல்லுமா என்பது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x