

பேமென்ட் வங்கி தொடங்குவதற் கான இறுதி அனுமதியை தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. இதனை தபால் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்திருக்கிறது. திட்டமிட்டபடி விரைவில் பேமென்ட் வங்கி செயல்படத் தொடங்கும் என தபால் துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறினார். பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு பேமென்ட் வங்கி தொடங்குவதற்காக முழுமை யான அனுமதி இந்திய தபால் துறைக்கு கிடைத்துள்ளது.
இந்த வங்கியின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஏபி சிங் நியமனம் செய்யப்பட் டிருக்கிறார். பங்குவிலக்கல் துறை யின் இணைச் செயலாளராக இருந்தவர். ஆதார் அமைப்பை உருவாக்கிய குழுவில் இவரும் ஒருவர்.
கடந்த 2015-ம் ஆண்டு 11 நிறு வனங்களுக்கு பேமென்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அளவிலான அனுமதியை வழங் கியது. இதில் மூன்று நிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்கும் திட்டத்தில் இருந்து விலகிவிட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் பேமென்ட் வங்கியை செயல்படுத்தியது. இன்னும் சில மாதங்களில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 400 கோடி ரூபாய் முதலீட்டை இந்த நிறுவனம் செய்திருக்கிறது.
ஆதித்யா பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலை யன்ஸ், வோடபோன் ஆகிய நிறு வனங்களுக்கு கொள்கை அளவி லான அனுமதி கிடைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இறுதி அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.