

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 61.60 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.
நேற்று வர்த்தக நேர முடிவின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்து 61.59 என்று இருந்தது. இன்று காலையிலும் அந்த தாக்கம் தொடர்ந்துள்ளது.
வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் சர்வதேச நாடுகளில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதாலும் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.