

ஹெச்1பி விசாவை வேகப்படுத்தும் நடைமுறைக்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும். சில நிறுவனங்கள் வரிசையில் வருவதை தவிர்ப்பதற்காக பிரீமியம் நடைமுறையை கையாளுகின்றன.
இந்த தடையால் ஐடி உள்ளிட்ட எந்த துறை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, நினைத்தவுடன் அமெரிக்காவுக்கு பணியாளர்களை அனுப்புவது குறுகிய காலத்துக்கு முடியாது.
அதே சமயத்தில் 2018-ம் நிதி ஆண்டுக்கான ஹெச்1பி விசாக்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் நடைமுறைகளில் அதி களவு விண்ணப்பங்கள் இருப்ப தால், நீண்டகாலமாக காத்திருக் கும் விண்ணப்பங்களை பரிசீல னை செய்யமுடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விண் ணப்பங்கள் காத்திருக்கின்றன.
சாதாரணமாக ஹெச்1பி விசா வுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் முடிவு கிடைப்பதற்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும். ஆனால் பிரீமிய முறையில் 1,225 டாலர் கூடுதலாக செலுத்தும் பட்சத்தில் 15 நாட்களில் விண்ணப்பத்துக்கு பதில் கிடைத்துவிடும்.