

கொத்தடிமை தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கான நிதி உதவித் தொகை ஐந்து மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. கொத்தடிமை தொழி லாளர்கள் விஷயத்தில் புதிய அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன என்று மத்திய தொழி லாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் இதை குறிப்பிட்டார். மேலும் பின்தங் கிய மற்றும் வறுமைக் கோட் டுக்கு கீழ் உள்ள பெண்கள் குழந்தைகளுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் கொத்தடிமை தொழி லாளர்களின் மறு வாழ்வு திட்டங்களுக்கான நிதி உதவி களும் ஐந்து மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக ரூ.20 ஆயிரமாக இருந்த நிதி உதவி ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். அவர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் விதமாக இந்த தொகைகள் அவர்களுக்கு உதவும்.
புதுப்பிக்கப்பட்ட இந்த திட் டத்தின் நோக்கம் கொத்தடிமை தொழில் நிறுவனங்களை கண்டறி வது, பெண்கள், குழந்தை தொழி லாளர்களை கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு தள்ளு வது, ஊனமுற்றவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் போன்ற பாதிக்கபட்டவர்களை பல முள்ளவர்களாக மாற்றுவதுதான் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் மத்திய அரசு தேசிய குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தை மேலும் வலுவானதாக மாற்றியுள்ளது. அதற்கு பக்க பலமாக இருக்கும் விதமாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்தியா அதிக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 2015-16ல் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7.6 சதவீதமாக உள்ளது, உள்நாட்டு தேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார். சமத்துவமான சமுதாயத்தை உரு வாக்குவதற்கான சர்வதேச அள விலான பொறுப்புகளுக்கு ஏற்ப எங்களது பொறுப்புகளையும் நாங் கள் உணர்ந்துள்ளோம் என்றார்.
வேலைவாய்ப்பு, கூலி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை ஒவ்வொருவருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியாவில் வேலைவாய்ப்பு அதி கரிக்கச் செய்ய வேண்டும் என்பது தான் எங்களது முன்னுரிமையாக உள்ளது.
மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா என தொழில் முனைவை ஊக்குவிக்கும் பல்வேறு முன் னெடுப்புகளை இந்திய அரசு மேற் கொண்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.