ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடாவுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் - 2019-ல் புதிய தயாரிப்பு வெளியாகிறது

ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடாவுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் - 2019-ல் புதிய தயாரிப்பு வெளியாகிறது
Updated on
1 min read

வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவ னம் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனத்துடன் ஒப்பந் தம் செய்து கொண்டுள்ளது. இம் மூன்று நிறுவனங்களும் இணைந்து உருவாகும் தயாரிப்புகள் 2019-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கான ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் குந்தர் புட்செக், ஃபோக்ஸ்வேகன் ஏஜி-யின் தலைமைச் செயல் அதிகாரி மதியாஸ் முல்லர், ஸ்கோடா ஆட்டோவின் தலைமைச் செயல் அதிகாரி பெர்ன்ஹார்டு மெயர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை யில் டாடா மோட்டார்ஸ் கூட்டணி நிறுவன தயாரிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க் கப்படுகிறது.அதிகம் விற்பனையா கும் சிறிய ரகக் கார் உருவாக்கத்தில் ஸ்கோடா நிறுவனமும், ஃபோக்ஸ் வேகன் குழுமமும் டாடா மோட்டார் ஸுக்கு உதவும். நீண்ட கால அடிப் படையில் ஒன்றுக்கொன்று எந்தெந்த பிரிவுகளில் உதவலாம் என்பதைக் கண்டறிந்து அதை செயல்படுத்தும் என்று டாடா மோட்டார்ஸ் வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்தியா மற்றும் வெளி நாடுகளுக்கேற்ற வாகனங்களைத் தயாரிப்பதில் இரு நிறுவனங்களும் தங்களது நிபுணத்துவத்தை ஒன் றிணைந்து வெளிப்படுத்தும் என நம்புவதாக புட்செக் குறிப்பிட் டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in