

மஹாநகர் கேஸ் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) விலை ரூ.380 முதல் 421 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 1,040 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
கெயில் நிறுவனம் மற்றும் பிஜி ஏசியா பசிபிக் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய நிறுவனம் இது. நிறுவனத்தின் நிறுவனர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பாக இருக்கும், இந்த ஐபிஓ வரும் ஜூன் 21-ம் தேதி தொடங்கி முதல் 23-ம் தேதி முடிவடை கிறது. ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதியை வைத்து மேலும் பல பகுதிகளில் விநியோகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.