மியூச்சுவல் பண்ட் முதலீடு: ஐடி பங்குகளில் அதிகரிப்பு

மியூச்சுவல் பண்ட் முதலீடு: ஐடி பங்குகளில் அதிகரிப்பு
Updated on
1 min read

ஐடி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக தங் களது முதலீட்டை அதிகரித் திருக்கின்றன. செப்டம்பர் மாத இறுதியில் 31,834 கோடி ரூபாய் அளவுக்கு ஐடி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்தன. பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகையில் 10.83 சதவீதம் ஐடி பங்குகளில் முதலீடு செய்யப் பட்டிருக்கின்றன.

மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்கள் பங்குச்சந்தையில் செய்திருக்கும் மொத்த முதலீடு 2.94 லட்சம் கோடி ரூபாயாகும்.

ஆகஸ்ட் 2009-ம் ஆண்டி லிருந்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் துறைவாரியாக செய்யும் முதலீடுக்கான தகவல்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஐடி துறையில் முதலீடு அதிகமாக இருப்பது இப்போதுதான். ஆகஸ்ட் 2009-ம் ஆண்டு 11,913 கோடி ரூபாயை ஐடி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. இதற்கு முந்தைய உச்சம் கடந்த ஆகஸ்டில்தான். அப்போது 29,668 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இதே போல வங்கித் துறையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. செப்டம்பர் மாத இறுதியில் 55,398 கோடி ரூபாய் வங்கி பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

இதை தவிர பார்மா துறையில் 21,908 கோடி ரூபாய், ஆட்டோ துறையில் 18,892 கோடி ரூபாய், நிதித்துறையில் 16,358 கோடி ரூபாயை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in