தேவை விதியின் விதிவிலக்குகள் - என்றால் என்ன?

தேவை விதியின் விதிவிலக்குகள் - என்றால் என்ன?
Updated on
1 min read

“தேவை அளவுக்கும், விலைக்கும் உள்ள எதிர்மறை உறவு” என்ற தேவை விதிக்கு இரண்டு பிரபலமான விதிவிலக்குகள் உண்டு. கிப்பன் (Giffen) பொருள், வெப்லன் (veblen) பொருள்.

கிப்பன் (1837-1910) என்ற பொருளியல் அறிஞர் தேவை விதிக்கு ஒரு விதிவிலக்கு உண்டு என்று காட்டினார். ‘ஒரு பொருளின் விலை அதிகரிக்கும்போது அப்பொருளின் தேவையும் அதிகரிக்கும்’, இவ்வாறு உள்ள பொருளை கிப்பன் பொருள் என்று கூறப்படும். அவர் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தில் ரொட்டியின் விலை உயரும் போது அதன் தேவை அளவும் உயர்வதை அவர் கண்டார்.

பொதுவாக ஏழை மக்கள் ரொட்டியை பிரதான உணவாகவும், எப்போதாவது அதிக விலையுள்ள இறைச்சியையும் உண்டனர். இந்தச் சூழலில், ரொட்டியின் விலை உயரும்போது, இறைச்சியின் தேவை அளவைக் குறைத்துக்கொண்டு, அதனால் கிடைக்கும் கூடுதலான பணத்தைக்கொண்டு மேலும் அதிகமான ரொட்டியை வாங்கி உண்பர்.

இங்கு, ரொட்டி விலை உயர்ந்தவுடன், மக்களின் உண்மை வருவாய் குறைகிறது. அதே நேரத்தில் ஒப்பீட்டு அளவில் இறைச்சி விலை குறைவாக இருந்தாலும், அதனை அதிகம் வாங்கி ரொட்டியின் குறைவாக வாங்கி அதனால் ஏற்படும் பயன்பாட்டு இழப்பை ஈடுகட்ட முடியாது. எனவே, இதில் வருமான விளைவு, பதிலீட்டு விளைவை விட அதிகம், மேலும், நுகர்வோர் பார்வையில் உண்மை வருவாய் குறைவதற்கு பதில் அதிகமாகிறது. எனவே, ரொட்டி விலை அதிகமானாலும் தேவை அளவு அதிகமாகிறது.

வெப்லன் (1857-1929) தேவை விதிக்கு மேலும் ஒரு விதிவிலக்கை கூறினார். ஒரு பொருளின் விலை குறையும் போது, அதன் தரமும் குறைந்து விட்டது என்று நினைத்து நுகர்வோர் அப்பொருளை குறைவாக வாங்குவது, வெப்லன் பொருள் என்று வர்ணிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் விலை உயர்ந்த பொருளை வைத்திருப்பது, நுகர்வதும் நம் சமூக அந்தஸ்தை உயர்த்தும் என்பதால், ஒரு பொருளின் விலை உயரும் போது அதை அதிகமாக வாங்குவது. இதனையும் வெப்லன் விளக்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in