

உலக அளவில் மூன்றாவது பணக்காரரும், பெர்க்ஷெயர் ஹாத்வே நிறுவனத்தின் தலை வருமான வாரன் பஃபெட் 286 கோடி டாலர் நிதி உதவி செய் துள்ளார். பில்கேட்ஸ் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் இதர நான்கு தொண்டு நிறுவனங்களுக்கும் இந்த தொகையை அளித்துள்ளார்.
286 கோடி டாலர் நிதி உதவியை பில்கேட்ஸ் மற்றும் மிலிண்டா கேட்ஸ் பவுண்டேஷ னுக்கும் இதர நான்கு நிறுவனங் களுக்கும் அளித்துள்ளார். பஃபெட் 11 வது ஆண்டாக இந்த நிதி உதவியை அளித்து வருகி றார். இந்த ஐந்து நிறுவனங்களுக் கும் 19.61 மில்லியன் பி கிளாஸ் பெர்க்ஷெயர் பங்குகளை அளித் துள்ளார் என்று பங்குச் சந்தை அமைப்புக்கு அளித்துள்ள தக வலில் நிறுவனம் கூறியுள்ளது.
கேட்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் வறுமையை ஒழிக்கவும், கல்வி மேம்பாடு மற்றும் மருத்துவ பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்புக்கு 1.49 கோடி பங்குகள் கொடுக்கப் பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டி லிருந்து பஃபெட் இதுவரை 2,430 கோடி டாலர் அளவுக்கு நிதி உதவிகள் செய்துள்ளார்.
பஃபெட் முதல் மனைவியின் நினைவாக உள்ள சூசன் தாம்சன் பஃபெட் பவுண்டேசன் நிறுவனம் மற்றும் ஹோவர்ட் ஜி.பஃபெட், ஷீர்வுட் மற்றும் நோவோ பவுண் டேசன் நிறுவனத்துக்கும் இந்த தொகையை அளித்துள்ளார்.
இந்த நிதி உதவிக்கு முன்னர் பஃபெட்டின் சொத்து மதிப்பு 6,840 கோடி டாலர்கள் என்று போர்ப்ஸ் கணித்துள்ளது. பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 77.6 பில்லியன் டாலர்கள் என்றும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.