

பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த பியுஜியாட் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந் திரா அண்ட் மஹிந்திரா வாங்கவுள்ளது. மஹிந்தரா டூ வீலர் நிறுவனம் மூலம் இப்பங்குகளை வாங்கபோவதாக எம் அண்ட் எம் அறிக்கையில் தெரிவித்தி ருக்கிறது.
மஹிந்திரா ரூ. 217 கோடி தொகைக்கு பியுஜியாட்டின் 51 சதவீத பங்குகளை வாங்க உள்ளது. இது தவிர எதிர்காலத்தில் 1.30 கோடி யூரோவை இந்நிறுவனத்தில் முதலீடு செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எம் அண்ட் எம் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பவன் கோயங்கா கூறும் போது இது இரு நிறுவனங்களுக்குமே சாதகம் என்று தெரிவித்தார். இரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்வதற்கும், அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கும் வசதியாக இருக்கும் என்றார்.
பியுஜியாட் நிறுவனம் ஐரோப்பாவில் 116 வருடங் களாக செயல்பட்டுவரும் நிறுவனமாகும். கடந்த மார்ச் மாதம் தென் கொரிய நிறுவனமான சங்யோங் மோட்டார் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை 2,105 கோடி ரூபாய் கொடுத்து எம் அண்ட் எம் நிறுவனம் வாங்கியது.