

2030-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என்று ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் சொல்லி இருக்கிறது. சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று இந்த நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் உலகம் இப்போது சூப்பர் சைக்கிள் காலத்தில் இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறது. அதாவது புதிய சந்தைகள், அதிகரிக்கும் வர்த்தகம், அதிகரிக்கும் நகரமயமாக்கல், அதிக முதலீடு மொத்தத்தில் அதிக வளர்ச்சி நடக்கும் காலத்தில் இப்போது உலகம் இருப்பதாக இந்த ஆய்வு சொல்லி இருக்கிறது.
இப்போது 1.8 டிரில்லியன் டாலராக இருக்கும் இந்திய ஜி.டி.பி. 2030-ம் ஆண்டு 15 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறது. மேலும் அப்போது சீனாவின் ஜி.டி.பி. 53.8 டிரில்லியன் டாலர்களாக முதல் இடத்திலும், அமெரிக்காவின் ஜி.டி.பி. 38.5 டிரில்லியன்களாக இரண்டாவது இடத்திலும் இருக்கும்.
இந்தியா, சீனா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளில் மந்த நிலை காணப்பட்டாலும், சீர்திருத்த நடவடிக்கைகள் வளர்ச்சிக்கான ஊக்கமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.