

இமாசலப் பிரதேசம், உத்திரா கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் சிறப்புச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். இந்த இரு மாநிலங்களுக்கு முதலீட்டில் மானிய சலுகை, சரக்குக் கட்டண சலுகை ஆகியன 2017-ம் ஆண்டு அதாவது 12-வது ஐந்தாண்டு திட்டகாலம் முடியும் வரை நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இவ்விரு மாநிலங்களில் தொழில் வளம் பெருக வேண் டும் என்பதற்காக சிறப்புச் சலுகையை 2003-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த சலுகை 2007ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. பின்னர் 2010-ம் ஆண்டில் இச்சலுகை தொடர்ந்தது. இப்போது இச்சலுகை 2017 வரை தொடரும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
2003-ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை இமாசலப் பிரதேசத்தில் மத்திய அரசின் முதலீட்டு மானிய சலுகை காரணமாக முதலீடுகள் அதிகரித்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மருந்து தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் பேக்கேஜிங் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் பெருகின.