

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.253 கோடியாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.3,342 கோடியாக இருக்கிறது.
அதே சமயத்தில் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.11,726 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.12,181 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 11.40 சதவீதமாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 11.35 சதவீதமாக இருந்தது.
வங்கியின் நிகர வாராக்கடன் சிறிதளவு சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 5.67 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப்போது 5.43 சதவீதமாக சரிந்திருக்கிறது. செப்டம்பர் காலாண்டிலும் 5.46 சதவீதமாக நிகர வாராக்கடன் இருந்தது.