

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறு வனத்தின் தலைமை நிதி அதி காரி. 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த பொறுப்பில் உள்ளார். நிறுவனத்தின் நிதி மற்றும் தகவல் தொடர்பு துறையின் செயல் இயக்குநராகவும் உள்ளார்.
1993-ம் ஆண்டு பயிற்சி நிர்வாகியாக பணிக்குச் சேர்ந் தவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
லண்டனை தலைமையாகக் கொண்ட யுனிலீவர் குழுமத்தின் சர்வதேச தலைமை கணக்காளராகவும், யுனிலீவர் அமெரிக்கா நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டமும், கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை உயர்கல்வியும் முடித்தவர்.