

கடந்த மார்ச் 31 வரை வருமான வரி தாக்கல் செய்தவர்களில் கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டிய தொகை ரூ.1.23 லட்சம் கோடி என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: 2016-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்தவர்களில் கூடுதலாக வரி செலுத்தியவர்கள் எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் 1,23,335 கோடி ரூபாய் திருப்பி அளிக்கவேண்டியுள்ளது. திருப்பி அளிக்க வேண்டிய தொகையில் 97,825 கோடி ரூபாய் ஆய்வு மதிப்பீட்டால் நிலுவையில் உள்ளது. சிலருக்கு அதிக தொகையை திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது. இதை வழங்குவதற்கு நிர்வாக ரீதியாக பல்வேறு நடைமுறைகள் உள்ள காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் வருமான வரியை திருப்பி அளிக்கும் வகையில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணை யத்தின் கீழ் பெங்களூருவில் மையப்படுத்தப்பட்ட நடைமுறை மையம்(சிபிசி) என்ற அமைப்பு இயங்கிறது. இதில் கூடுதல் வரி செலுத்தி 5,000 ரூபாய் வரை நிலுவைத் தொகை உள்ளவர் களுக்கு இந்த மையத்தில் பணம் திரும்ப வழங்கப்படுகிறது என கங்வார் தெரிவித்துள்ளார்.