Published : 09 Jun 2017 10:33 am

Updated : 09 Jun 2017 10:33 am

 

Published : 09 Jun 2017 10:33 AM
Last Updated : 09 Jun 2017 10:33 AM

வணிக நூலகம்: அளவில்லா அற்புதங்கள்!

கையில் வெண்ணையை வைத் துக் கொண்டு, நெய்க்கு அலைவதைப்போல, நமக்குள்ளே புதைந்துக்கிடக்கும் ஆற்றலையும் அதன் அற்புதங்களையும் அறியாமல், வெற்றிபெற சிரமப்படுவோர் உண்டு. நம்மில் உள்ள சக்திகளை சரியாக கண்டறிந்து, அதை திறம்பட வளர்த்தெடுக்கும்போது வெற்றிக்கனி எளிதில் நம் வசப்படும்.

ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு விரும்பத்தகாத சூழ்நிலையும், ஒவ் வொரு தோல்வியும், ஒவ்வொரு துர திர்ஷ்டமும் மற்றும் ஒவ்வொரு வலி யும் அவற்றுக்கு ஈடான நன்மையின் விதையை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகச்சிறந்த நன்மைகளை பெறுவதற் கான, ஆக்கப்பூர்வமான அடித்தளமாக இவ்விதைகள் அமைந்துள்ளன என் கிறார் “யு கேன் வொர்க் யுவர் ஓன் மிராக்கிள்ஸ்” என்னும் இந்த புத்தகத் தின் ஆசிரியர் “நெப்போலியன் ஹில்”.

மனப்பாங்கின் மகத்துவம்!

உங்களால் உங்கள் மனதின் அணுகு முறையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமானால், உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற அனைத்து காரணிகளையும் கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர். ஆம், வாழ்க்கைப் பயங்கள் மற்றும் துன்பங்கள் என அனைத்தையும் உங்களால், அதாவது உங்கள் மனதால் கட்டுப்படுத்த முடி யும். மற்றவர்கள் ஈர்ப்பதோ அல்லது புறக்கணிப்பதோ எதுவாயினும், அதற் கான அடிப்படை ஒருவரது அணுகு முறையே. நேர்மறை அணுகுமுறையால் நன்மைகளைப் பெறுவதையும், எதிர் மறை அணுகுமுறையால் தீமைகளைப் பெறுவதையும் தீர்மானிக்கக்கூடிய சக்தி அவரவரே.

மற்றவர்களுடைய எண்ணங்களை யும் செயல்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நம் மனதில் உருவாகும் எண்ணங்களையும், நம்மால் மேற்கொள்ளப்படும் செயல் பாடுகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும் அல்லவா!. இதுமட்டுமல்ல, நமது மனப்பாங்கும் அதன் வலிமை யுமே, நமது உடல் வலிமையையும் சீராக வைத்திருக்க உதவுகின்றது. மற்ற காரணிகளைவிட ஒரு நோயாளியின் மன தைரியமே, அவனுக்கான முதன்மை யான நோய் தீர்க்கும் மருந்து என்பதை மருத்துவர்களே சொல்லக் கேட்டிருப்போம். வெற்றிக்காகப் போரா டும் எவராயினும், அவர்களது மனப் பாங்கே அவர்களை வழிநடத்திச் செல்லும் என்பதை அறிய வேண்டியது அவசியம்.

நல்ல மனம் வேண்டும்!

வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கு நமது மனமும் அதன் அணுகுமுறை களுமே அடிப்படை என்பதெல்லாம் சரி. வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் தேவை நல்ல அணுகு முறைகள், அதாவது நேர்மறையான அணுகுமுறைகள் என்பதுதான் முக்கியமானது. பயம் மற்றும் கவலை போன்ற விஷயங்களின் மீது நாம் ஆதிக்கம் செலுத்தி, வாழ்க்கைப் பாதையின் அனைத்து வழிகளிலும் வெற்றிகரமாக பயணிப்பதற்கு இந்த நேர்மறை அணுகுமுறைகள் அவசியம். ஏழ்மையை சிந்திக்கும்போது வாழ்வும் வறுமையாகவும், செல்வத்தின் மீதான சிந்தனையின்போது வாழ்வும் செழிப்பாகவும் அமையும் என்பதே ஆசிரியரின் வாதம்.

ஆயிரமாயிரம் தோல்விகளின் வழியே உருவான தாமஸ் ஆல்வா எடிசனின் நேர்மறை அணுகுமுறைகளே அவருக்கான நீடித்த புகழைப் பெற்றுத்தந்தது. எத்தனையோ ஆரம்ப கால போராட்டங்களுக்கு இடையே ஹென்றி ஃபோர்டின் நேர்மறை அணுகு முறைகளே மிகச்சிறந்த கண்டு பிடிப்பினை தந்துள்ளது. கணக்கி லடங்கா இன்னல்களின் போதும் மகாத்மா காந்தியின் நேர்மறை அணுகு முறைகளே ஆங்கிலேய படைகளின் வலிமையை விட அதிக ஆற்றலை அவருக்குத் தந்தது. இறுதியில் கிடைக்கப்போகும் அனைத்து வெற்றி களுக்குமான அடிப்படை, ஆரம்பத்தில் உருவாகும் எண்ணம் மற்றும் செயல்பாடுகளே. அதை நேர்மறை யானதாக அமைத்துக்கொள்வதே அவசியம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

வளர்ச்சிக்கான விதி!

ஆட்டோமொபைல், டெலிபோன், ரேடியோ, டெலிவிஷன், சினிமா, ரேடார் என ஏகப்பட்ட கண்டுபிடிப்புகள் இருப தாம் நூற்றாண்டின் முதல் பாதி கால கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. மனித மனங்களில் உருவான மாற்றத்தின் செயல்பாட்டு முடிவுகளே இத்தகைய முன்னேற்றங்கள். வளர்ச்சிபெற வேண்டு மானால் மாற்றத்தை ஏற்று, அதை மனதிற்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஆம் மனித முன் னேற்றத்திற்கான அடிப்படை கருவி மாற்றமே. தொடர்ச்சியான மாற்றங்கள் தோன்றும்போது, தொடர்ச்சியான செயல்பாடுகள் உருவாகி அதன்மூலம் தொடர்ச்சியான வெற்றிக்கு வழிவகுக் கிறது.

ஒரு சிறிய அறைக்குள் தொடங்கப் பட்ட எத்தனையோ நிறுவனங்கள், இன்று பல மில்லியன் அளவிற்கு மாபெரும் வளர்ச்சியடைந்திருப்பது தொடர்ச்சியான மாற்றத்தின் மூல மாகவே என்பதை மறந்துவிடக்கூடாது. வேலைக்காகாத பழைய பழக்கங் களை அறவே நீக்கிவிட்டு, புதிய எண்ணங்களுக்கும் பழக்க வழக்கங் களுக்கும் மனதில் இடமளிக்க அடித் தளமிட வேண்டும். இதை நமது தின சரி செயல்பாடுகள் சிலவற்றில் பரி சோதனை முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட் டுள்ளார் ஆசிரியர்.

போராட்டங்களின் பயன்!

நாம் பிறந்தது முதல் மரணம் வரையிலான ஒட்டுமொத்த வாழ்விலும் எத்தனையோ வகையான போராட்டங் களை கண்டிப்பாக சந்தித்தே ஆகவேண் டியுள்ளது அல்லவா!. போராட்டங்களை தவிர்த்து எவராலும் இவ்வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கையில் போராட்டம் என்பதை யெல்லாம் தாண்டி, வாழ்க்கையே போராட்டம்தான் என்போரும் உண்டு. உண்மையில் போராட்டங்களே, நமக்கு தேவையான ஆற்றலைத் தருகின்றன என்கிறார் ஆசிரியர். அதுமட்டுமல்லாமல், போராட்டங்களே வெற்றிக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித்தருகின்றன என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

உணவு, இருப்பிடம், உடல்நலன், சம்பாத்தியத்திற்கான வாய்ப்பு, தொழில், வேலை, அங்கீகாரம் மற்றும் முன் னேற்றம் என நமது போராட்டக் களங் களுக்கு முடிவேயில்லை. போராட்டத் திற்கான சிறந்த தீர்வு போராடுவதே. ஆம், போராட்டத்தை ஒதுக்கித்தள்ளாமல் அதனுள் இறங்கி செயல்படும்போது மட்டுமே வெற்றிக்கான வலிமை நம் மிடம் வந்துசேர்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு மரத்தை வலிமை யானதாக கருதமுடியாது. தன்னந் தனியாக திறந்தவெளியில், பலமான காற்றை எதிர்த்து, நிலையான போராட் டத்தை கொடுக்கின்ற மரமே உண்மை யில் வலிமையானது என்பதை உணர் வோம்.

மிகச்சிறந்த செல்வங்கள்!

ஒருவர் தன் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கான காரணிகள் சிலவற்றைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். அவை, நல்ல அணுகுமுறைகள்: மற்ற அனைத்து வகையான குணங்களுக்கும் அடிப்படை இவையே. அடுத்ததாக, சிறப்பான உடல் வலிமை: நல்ல திடகாத்திர உடல் இல்லாமல் திறம்பட சிந்திக்கவோ செயல்படவோ முடியாது. அடுத்ததாக, இணக்கமான உறவுமுறைகள்: நாம் நம்மிடம் கொண்டுள்ள உறவுமுறையும், நாம் மற்றவர்களிடம் கொண்டுள்ள உறவுமுறையும் நமக்கான வெற்றியில் பெரும்பங்கு வகிக்கின்றன.

அடுத்ததாக, பயத்திலிருந்து விடுபடுதல்: பயத்திற்கு அடிமையாகாத எவரும் மிகச்சிறந்த வெற்றியாளர்களே. அடுத்ததாக, எதிர்கால சாதனைகளின் மீதான நம்பிக்கை: இவை நமது வாழ்வின் நீடித்த மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் பெரும் துணைபுரிவதாக உள்ளன. அடுத்ததாக, உண்மையின் திறன்: நமது ஒவ்வொரு செயலுக்கு மான மனோபலத்தை தருவதாக இது அமைந்துள்ளது. அடுத்ததாக, பகிர்ந்துக் கொள்ளும் கலை: உண்மையில் இவ்வகை மனநிலையானது நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வல் லமை கொண்டதாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.

அடுத்தது, அனைத்து நிலைகளிலும் தேவையான திறந்த மனநிலை: இதனை தொடர்ந்து பராமரித்துவரும் ஒருவர் மிகச்சிறந்த ஞானமுடையவராகிறார் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அடுத்ததாக, சுய ஒழுக்கம்: தனக்குதானே சிறந்தவனாக ஆகமுடியாத ஒருவன், ஒருபோதும் வேறு வகையான வெளிப்புற விஷயங்களில் சிறப்படைய முடியாது. அடுத்ததாக, மற்றவர்களைப் புரிந்துக்கொள்ளும் ஆற்றல்: இது ஒருவருக்கு மற்றவர்களிடம் சிறந்த மரியாதையையும், மதிப்பினையும் பெற் றுத்தருகின்றது. இறுதியாக, பொருளா தார பாதுகாப்பு: இது பணத்தை மட்டுமின்றி அனைத்து வகையான மனித தேவைகளையும் உள்ளடக்கியது.

எண்ணத்திலும் செயலிலும் மாற் றத்தை கொண்டுவரும்போது, மாற்றமே எண்ணமாகவும் செயலாகவும் மாறி நம்மை உயரத்திற்கு உந்திச்செல்லும் என்பதை உளமார உணர்ந்து செயல்படத் தொடங்குவோம்.

தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in
வணிக நூலகம்அளவில்லா அற்புதங்கள்மிகச்சிறந்த செல்வங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x