Published : 07 Jul 2016 10:15 AM
Last Updated : 07 Jul 2016 10:15 AM

இவரைத் தெரியுமா?- சோஹிந்தர் கில்

முன்னணி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2008-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2005ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஜிபிஎல் குழும நிறுவனத்தின் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

ஜேகே டயர்ஸ் நிறுவனத்தின் உத்திகள் மேலாண்மை பிரிவின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் உற்பத்தி பிரிவிற்கு பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.

கைனட்டிக் ஹோண்டா நிறுவனத்தின் புணே பிரிவின் மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.

டெல்லி இன்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.

1976-ம் ஆண்டு லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். எஸ்கார்ட்ஸ் மோட்டார் சைக்கிள் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x