Published : 06 Jul 2016 10:04 AM
Last Updated : 06 Jul 2016 10:04 AM

இவரைத் தெரியுமா?- அனந்த் நாராயணன்

இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள மிந்த்ரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மெக்கென்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

2010-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை மெக்கென்சி நிறுவனத்தில் ஆசிய பிரிவின் மேனேஜிங் பார்ட்னர் பொறுப்பில் இருந்தவர்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

தொழில் திட்டங்கள், புராடக்ட் டெவலெப்மெண்ட், உத்திகள் வகுப்பது போன்றவற்றில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x