ரூ. 7.5 கோடி காசோலை மோசடி வழக்கு: மல்லையாவுக்கு சம்மன் அனுப்பியது சரியே- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ரூ. 7.5 கோடி காசோலை மோசடி வழக்கு: மல்லையாவுக்கு சம்மன் அனுப்பியது சரியே- உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வுக்கு சம்மன் அனுப்பியது சரியே என்று டெல்லி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

டெல்லி விமான நிலையத்துக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.7.5 கோடி மதிப்பிலான காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல் திரும்பின.

இது தொடர்பாக மல்லையா வுக்கு சம்மன் அனுப்புமாறு டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக விசாரணை நீதிமன்றம் மல்லையாவுக்கு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என மல்லையா சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்யப் பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.எஸ். தேஜி முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது. மல்லையாவின் நிறுவனம் அளித்த காசோலையில் போதிய பணம் இல்லாமல் திரும்பியது என்றால் அதற்கு மல்லையாவும் பொறுப்பாளியாவார். எனவே அவர் மீது வழக்கு தொடர சம்மன் அனுப்பியது சரி என்று குறிப்பிட்டார்.

விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை, சட்ட விரோதம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் இந்த வழக்கில் சம்மனை தள்ளி வைப்பதற்கே இடமில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் அன்றாட அலுவல் பணியில் தனது கட்சிக்காரரான விஜய் மல்லையா ஈடுபடுவது கிடையாது. எனவே காசோலை மோசடி வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என மல்லையாவின் வழக்கறிஞர் வாதாடினார்.

சம்மனில் மல்லையாவின் பெயர் குறிப்பிடவில்லை என்பதால் அவருக்கு பொறுப்பு இல்லை என்று கூற முடியாது என்றும் சம்மன் அனுப்பியதை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேவையைப் பயன் படுத்தியற்காக 2012-ம் ஆண்டில் வழங்கப்பட்ட காசோலையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in