இவரைத் தெரியுமா?- சஞ்சய் சர்மா

இவரைத் தெரியுமா?- சஞ்சய் சர்மா
Updated on
1 min read

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரோம்பீ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2004-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கீடோன் டெக்னா லஜீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தார்.

1997-ம் ஆண்டிலிருந்து 2001-ம் ஆண்டு வரை பிளெக்ஸிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை ஸ்கெலம்பெர்கர் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

1992-ம் ஆண்டு இஎம்சி நிறுவனத்தில் மென்பொருள் ஆலோசகராக பணியைத் தொடங்கியவர்.

மும்பை பல்கலக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும், அமெரிக்காவில் உள்ள சவுத் டகோடா பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பட்டமும் பெற்றவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in