

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டலின் ஆண்டு சம்பளம் ரூ.30 கோடி ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் தலைவராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டார். ஆண்டுக்கு நிரந்தர சம்பளமாக ரூ.21 கோடி, செயல்பாடுகள் அடிப் படையிலான சம்பளம் ரூ.9 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பளத்தில் இதர சலுகைகள் சேர்க்கப்படவில்லை. அதே சமயத்தில் ஆண்டு நிரந்தர சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு அளிக் கப்படாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடந்த நிறுவனத்தின் 21-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல நிறுவனத்தின் சிஇஓ (இந்தியா மற்றும் தெற்காசியா) கோபால் விட்டலின் ஆண்டு நிரந்தர சம்பளம் ரூ.7 கோடி ஆக இருக்கும் இது தவிர பங்குகள், இதர சலுகைகளும் உண்டு. கடந்த நிதி ஆண்டில் சம்பளம் சலுகைகள் உள் பட 10.3 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் கோபல் விட்டல்.