இரண்டு மாதத்திற்குள்ளேயே வங்கிகளுக்கு முன் நின்ற மக்கள் தற்போது காணவில்லை: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

இரண்டு மாதத்திற்குள்ளேயே வங்கிகளுக்கு முன் நின்ற மக்கள் தற்போது காணவில்லை: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து
Updated on
1 min read

உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை நீக்கம் செய்த இரண்டு மாதத்திற்குள்ளேயே வங்கிகளுக்கு முன்நின்ற கூட்டம் காணவில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: பண மதிப்பு நீக்கம் அறிவிக் கப்பட்டு அதனால் ஏற்பட்ட சிரம மான சூழலில் கூட சமூக ஒழுங்கு சீர்குலைவு ஏற்படவில்லை. மிகப் பெரும்பான்மையான மக்கள் இந்த முடிவை ஆதரித்ததே காரணம்.

125 கோடி மக்கள் தொகையில் 3.7 கோடி பேர்கள்தான் 2015-16-ல் வருமான வரி செலுத்தியுள்ளனர். இதிலும் கூட சுமார் 3 கோடி பேர் ஆண்டு வருவாயை ரூ.5 லட்சத் திற்கும் குறைவாகவே காட்டுகின் றனர். 24 லட்சம் பேர்தான் ரூ.10 லட் சத்திற்கும் அதிகமான ஆண்டு வரு வாய் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது வரி ஒத்துழைப்பு தராத சமூகத்தை நமக்கு அடையாளப் படுத்தும் புள்ளி விவரமாகும். வறுமை ஒழிப்பு, தேசப்பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை வரி வருவாய் இல்லாததால் சமரசம் செய்து கொள்ளப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகிறது. 70 ஆண்டுகளாக இந்திய ‘இயல்பு’ என்பது பகுதி ரொக்க மற்றும் பகுதி காசோலை பரிவர்த்தனையாகவுமே இருந்து வந்துள்ளது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி யின் திட்டம் ‘புதிய இயல்பு நிலை’ என்பதை நோக்கி செயல்படுகிறது. இந்தியா மற்றும் இந்தியர்களில் செலவின முறைகளை மாற்றும் போது அது நிச்சயம் இடையூறு செய்வதாகத்தான் இருக்கும். அனைத்துச் சீர்த்திருத்தங்களும் இடையூறு செய்வதே. இதற்கு முன்னால் இருந்த நிலைமைகளை அது மாற்றும், தக்க வைக்காது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in