Published : 31 Jul 2016 12:03 pm

Updated : 14 Jun 2017 15:32 pm

 

Published : 31 Jul 2016 12:03 PM
Last Updated : 14 Jun 2017 03:32 PM

அசோக் லேலண்ட் துணைத்தலைவர் சேஷசாயி ராஜினாமா

அசோக் லேலண்ட் துணைத் தலைவர் ஆர்.சேஷசாயி ராஜினாமா செய்திருக்கிறார். தற்போது அவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவராக இருக்கிறார். கடந்த 28-ம் தேதி இவரது ராஜினாமாவை அசோக் லேலண்ட் இயக்குநர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஏன் ராஜினாமா செய்தார் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இது குறித்து சேஷசாயி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.


ஹிந்துஜா குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அந்த குழுமத்தில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 13 வருடங்கள் (1998-2011) நிர்வாக இயக்குநராக இருந்தார். அதன் பிறகு துணைத்தலைவராக உயர்ந்தார்.

1976-ம் ஆண்டு அசோக் லேலண்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 1983-ம் ஆண்டு செயல் இயக்கு நராகவும், 1993-ம் ஆண்டு துணை நிர்வாக இயக்குநராகவும் 1998-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராகவும் பதவி உயர்த் தப்பட்டார்.

இவரது பதவி காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 மடங்கு உயர்ந்தது.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



அசோக் லேலண்ட் துணைத்தலைவர் சேஷசாயிசேஷசாயி ராஜினாமா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author