Published : 06 Nov 2013 12:34 PM
Last Updated : 06 Nov 2013 12:34 PM

ராணா கபூர் - இவரைத் தெரியுமா?

#இந்தியாவில் செயல்படும் நான்காவது பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியை உருவாக்கியவர்.

#தில்லியில் பள்ளி, கல்லூரி படிப்பு. அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலையில் எம்பிஏ பட்டம்.

#1996-ல் கிரிண்ட்லேஸ் வங்கியில் பொது மேலாளராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் இந்தியப் பிரிவு தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

#1998-ல் ராபோ இந்தியா ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்நிதி நிறுவனத்தில் பிரதான பங்குதாரராகவும் இருந்தார்.

#2003-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி லைசென்ஸ் அளித்ததைத் தொடர்ந்து மைத்துனர் அசோக் கபூருடன் இணைந்து யெஸ் வங்கியைத் தொடங்கினார். இப்போது வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

#அசோசேம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் மிகச் சிறந்த வங்கியாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x