

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) 2013 லிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். மற்றும் மேம்பாட்டு மையத்தின் பொது மேலாளராகவும் பொறுப்பில் இருக்கிறார்.
22 ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் துறையில் உள்ளார். 1991 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தார். நிறுவனத்தின் பல்வேறு மென்பொருள் மேம்பாடு முயற்சிகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.
இந்தியாவில் விண்டோஸ் இயங்குதள சேவையை விரிவுபடுத்த 2003ல் இந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
மென்பொருள் மேம்பாடு, வடிவமைப்பு, முன் விற்பனை, திட்ட மேலாண்மை போன்றவற்றில் வல்லுநர்.
நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களைப் பெற்றவர்.