

சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமெரிக்க மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. தவிர நடப்பு ஆண்டில் மேலும் ஒரு முறையும், 2018-ம் ஆண்டில் மூன்று முறையும் வட்டி உயரலாம் என்றும் அமெரிக்க மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.
நடப்பு ஆண்டில் வேலையில் லாதவர்கள் விகிதம் 4.2 சதவீதம் அளவிலேயே இருக்கும். நடப்பு ஆண்டில் வளர்ச்சி 2.2 சதவீதமாக இருக்கும் என அமெரிக்க மத்திய வங்கி கணித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் வளர்ச்சி 2.1 சதவீதமாக இருக்கும் என மத்திய வங்கி கணித்திருந்தது.
ஆனால் பணவீக்கம் குறை வாகவே இருக்கும் என கணிக்கப் பட்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் பணவீக்கம் 1.6 சதவீதமாக இருக் கும் என கணித்திருக்கிறது. முன்ன தாக 1.9% இருக்கும் என கணிக் கப்பட்டது. பணவீக்கத்துக்கு இரண்டு சதவீத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த இலக்கினை எட்டுவோம் என பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெனட் ஏலன் தெரிவித்தார். மேலும் சர்வ தேச நிதிச்சந்தைகளில் ஏற்ற இறக் கத்தை உருவாக்கும் திட்டம் எது வும் இல்லை என்றும் கூறினார்.
இந்திய சந்தை சரிவு
அமெரிக்க வட்டி விகிதத்தை உயர்த்தியவுடன் இந்திய சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. மூன்று வாரங்களில் இல்லாத சரிவு இதுவாகும். சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 31075 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 9578 புள்ளியில் முடிவடைந்தது. மே 26-ம் தேதிக்கு பிறகு 9600 புள்ளிகளுக்கு கீழே நிப்டி சரிவது இப்போதுதான். அதே சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பில் பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை.
ஜெனட் ஏலன்