

விஜய் மல்லையாவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிப் பதற்கு முன்னதாக இண்டர்போல் அமலாக்கத் துறை இயக்குநரகத் திடம் விளக்கங்களை கேட்டுள் ளது. விஜய் மல்லையா வங்கிக ளிடம் வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திருப்பிச் செலுத்த வில்லை. இது தொடர்பான விவ ரங்களை அமலாக்கத் துறையின ரிடம் இண்டர்போல் கேட்டுள்ளது.
விஜய் மல்லையாவை இந்தி யாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு மறுத்துவிட்ட நிலையில் அவரை கைது செய்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறையினர் எடுத்து வருகின்றனர்.
விஜய் மல்லையா மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப் படுவதற்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக என்னென்ன சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அமலாக்கத்துறையினரால் எடுக்கப்பட்டுள்ளது பற்றி விரி வான தகவல்களை சர்வதேச போலீஸ் அமைப்பு கேட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரி வித்தார். விஜய் மல்லையா மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப் பித்துவிட்டால் இண்டர்போல் அவரை கைது செய்து இந்தியா விற்கு கொண்டு வந்து விட முடியும்
இண்டர்போல் இது போன்ற விளக்கங்களை கேட்பது வழக்கமானது. விஜய் மல்லையா வுக்கு எதிராக கைது வாரண்டை பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவின் கோரிக்கையை மறுப்பதாக இண் டர்போல் அமைப்பு கூறவில்லை. இண்டர்போல் கேட்டுள்ளது தொடர்பான அனைத்து விளக்கங் களும் அளிக்கப்படும் என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற விளக்கங்கள் லலித் மோடி உட்பட பல்வேறு வழக்குகளில் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இண்டர்போல் அமைப்பை திருப்திபடுத்த முடியும் என்று அமலாக்கப் பிரிவினர் நம்புகின்றனர்.