

இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலை அமைப்பது தொடர் பாக ஆப்பிள் நிறுவனத்தின் கோரிக் கைகள் அனைத்தையும் அரசு ஏற்க வில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இத்தக வலை அவர் தெரிவித்தார். இந்தியா வில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு உற்பத்தி வரிச் சலுகை, பழுது பார்க்கும் பிரிவுகளுக்கு சலுகை, உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை உள் ளிட்டவற்றை 15 ஆண்டுகளுக்கு அளிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அரசிடம் எதிர்பார்க்கிறது.
இது தவிர உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 30 சதவீத அளவுக்கு உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டாய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தது.
மேலும் வெளிநாட்டிலிருந்து முழுமையாக இறக்குமதி செய் யப்பட்டு அசெம்பிள் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், பகுதி அளவி லான ஸ்மார்ட்போன்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை தர வேண் டும் என கோரியிருந்தது.