Published : 09 Apr 2017 08:14 AM
Last Updated : 09 Apr 2017 08:14 AM

குன்னூரில் ‘தங்க இலை’விருது போட்டி தொடக்கம்

தென் மாநிலங்களில் உள்ள சிறிய, பெரிய தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூளுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கியை ஏற்படுத்தும் வகையில், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம், தேயிலை வாரியம் சார்பில் ஆண்டுதோறும் ‘கோல்டன் லீஃப் இந்தியா’ விருதுக்கான போட்டி நடத்தப்படுகிறது.

அதன்படி, தென்னிந்திய தேயிலை தூளுக்கான 13-வது ‘கோல்டன் லீஃப் இந்தியா’ (தங்க இலை) விருதுப் போட்டி, குன்னூர் உபாசி அரங்கில் நேற்று தொடங் கியது. இந்தப் போட்டியில், நீலகிரி, வால்பாறை (தமிழ்நாடு), வயநாடு, மூணாறு (கேரளா), கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் உள்ள 45 தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து 123 வகை தேயிலை தூள்கள் உள்ளன.

பிரபல தேயிலை நிறுவனங் களைச் சேர்ந்த ஜி.எஸ்.கன்னா, நிமிஸ் பி.பரேக், கே.கே.ரகு, ராஜேஷ் குப்தா மற்றும் சோமன் ஆகியோர் நடுவர்களாக செயல் பட்டு, தேயிலைத் தூளின் மணம், தரம், குணத்தை ஆய்வு செய்தனர்.

‘கோல்டன் லீஃப் இந்தியா’ விருது கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் வி.உன்னி கிருஷ்ணன் கூறும்போது, “குன்னூரில் நடக்கும் முதல்கட்ட பரிசோதனையைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இறுதிக்கட்ட பரிசோதனை நடத்தப்படும்.

சர்வதேச தரத்துக்கு இணை யாக தயாரிக்கப்படும் தேயிலை தூள்கள்தான் போட்டியில் பங்கு பெறுகின்றன. போட்டியில் பங்கு பெறும் தேயிலை தூள்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி சந்தையை ஏற்படுத்த, சிறப்பு ஏலம் நடத்தப்பட உள்ளது.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x